facebook

அம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம்: சட்டமா அதிபரை சந்திக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோவை சந்திக்க அந்த கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
அம்பாந்தோட்டையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடவே அவர்கள், சட்டமா அதிபரை சந்திக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனை சந்தித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
மேற்படி தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸாரும் பொலிஸ் திணைக்களமும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளன.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அம்பாந்தோட்டை பொலிஸார் பிரச்சினை சமசர குழுவிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்தே விசாரணைகள் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments