facebook

சோமாவதி புனித பூமி பாதுகாப்புப் பணி ஆரம்பம்

பொலன்னறுவையில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க சோமாவதி புனித பூமி தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தேசிய உரிமைகள் தொடர்பான அமைச்சின் வழிகாட்டலில் தொல்பொருள்கள் திணைக்களத்தினூடாக இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பாதுகாப்புப் பணிகளுக்கான மொத்தச் செலவு 4.1 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.  பாதுகாப்பு மதில் மற்றும் பூஜைப்பீடம் (வாஹல்கட) என்பன பிரதானமாக புனரமைக்கப்படவுள்ளதுடன் தொல்பொருள் ஆய்வுகளும் நடத்தப்படவுள்ளன.

கரிஅபய மன்னரினால் தெற்கு தந்தத்தை புதையலாக்கி கட்டப்பட்டதாக நம்பப்படும் தூபி மற்றும் ஆராம தொகுதியும் சோமாவதி புனிதபூமியில் காணப்படுகிறது.

கி.வ.முதலாம் நூற்றாண்டு தொடக்கம் 12ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச்சான்றுகள் இங்கு காணப்படுகிறன.

உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் தொல்பொருள் கல்வி ஆராய்ச்சிக்கு இப்பிரதேசத்தைப் பயன்படுத்துவதும்- புராதன இடிபாடுகளற்ற பிரதேசங்களை கண்டறிவதும் இப்புனரமைப்புப் பணியின் நோக்கமாகும்.

Post a Comment

0 Comments