facebook

தாங்கள் பயங்கரவாத அமைப்பு என்பதை உறுதிப்படுத்திய பொதுபல சேனா

பொதுபல சேனா தமது அமைப்பு மத பயங்கரவாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
சிங்கள மக்களை ஒன்றிணைப்பதாக கூறி பொதுபல சேனா அமைப்பு தமது கொடிகளுடன் பதுளை நகரில் நடத்திய பேரணியின் போது பேரணியில் இருந்த சிறுவனை முஸ்லிம் எனக் கூறி அந்த அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
நீ.. தம்பியன் எனக் கூறி, கெட்ட வார்த்தைகளால், சிறுவனை யார் எனக் கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் தலையிட்டு சிறுவனை விடுவித்தார். பேரணியை பார்வையிட வந்ததாகவும் பேரணியில் பேசுவதை கேட்கவே தான் பேரணிக்குள் நுழைந்ததாகவும் சிறுவன் கூறியுள்ளார்.
பொதுபல சேனா என்ற அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பு பாசிச கொள்கைளை பின்பற்றி வருவதுடன், எதனையும் அறியாத சிறுவர்களையும் இலக்கு வைத்து தாக்கி வருகிறது.
புத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறும் பொதுபல சேனா எந்த தர்மத்தின் அடிப்படையில் சிறுவனை தாக்கியது என நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Post a Comment

0 Comments