facebook

பஸ்ஸில் பெண்ணை படம் பிடித்த இளைஞன் கைது

மொறட்டுவவில் இருந்து புறக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பெண் பயணி ஒருவரை படம் பிடித்த இளைஞன் தெகிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். யுவதியை கையடக்கத் தொலைபேசிக் கமராவில் இளைஞன் படம் பிடிக்கின்றமையை சக பயணி ஒருவர் அவதானித்து பஸ் நடத்துனருக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார். பயணிகளின் உதவியுடன் இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டு, போக்குவரத்துச் சீராக்கல் கடமையில் ஈடுபட்டு இருந்த கான்ஸ்டபிளிடம் கையளிக்கப்பட்டார்.
  
இளைஞனின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் சோதிக்கப்பட்டது. அப்போது 50 இற்கும் அதிகமான புகைப்படங்கள் தொலைபேசிக் கமராவில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன. இளைஞன் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.

Post a Comment

0 Comments