facebook

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபருக்கு 3 ஆண்டு சிறை

கனடிய தொழிலதிபர் ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒட்டாவாவை சேர்ந்த நசிர் கரிகர் (67) என்ற தொழிலதிபர் கடந்த 2007ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு நிறுவனமான க்ரிப்டோமெட்ரிக்ஸின் ஊழியர்களுடன் சேர்ந்து பல கோடி மதிப்புள்ள மென்பொருள் ஒப்பந்தத்தை பெற திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இந்தியா பாதுகாப்பு திட்ட குழுவின் துணை தலைவருக்கு ரூ. 1 கோடியே 16 லட்சத்து 86 ஆயிரத்து 200ம், அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான பிரபுல் பட்டேலுக்கு 1 கோடியே 46 லட்சத்து 7 ஆயிரத்து 750ம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீது புகார் எழுந்ததுடன், ஒப்பந்தம் அந்த நிறுவனத்திற்கு கிடைக்காமல் போய்விட்டது.
இந்நிலையில் வெளிநாட்டில் ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்ததாக கரிகர் மீது கனடிய பொலிசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனடாவின் வெளிநாட்டு ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
மேலும் நிறுவனங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலாக நபர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments