facebook

அனுராதபுர குளங்களை புனரமைப்பதற்கு 384 மில்.ரூபா நிதி ஒதுக்கீடு

அனுராதபுரம் மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள குளங்களை புனரமைப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 384மில்லியன் ரூபா நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குளங்களை புனரமைப்பதற்காக கிடைக்கப்பெற்றுள்ள இந்த நிதியினால் விவசாய அமைப்புகளின் அபிப்பிராயப்படி தேவையான குளங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments