facebook

துருக்கியை உலுக்கிய பூமியதிர்ச்சி : 266 பேர் காயம்

வடமேற்கு துருக்கியை சனிக்கிழமை உலுக்கிய 6.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி காரணமாக 266 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 
 
 
கடலுக்கு கீழ் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியால் அநேகமான நகர்களில் கட்டடங்கள் நடுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
கட்டடங்களிலிருந்து வெளியேற முண்டியடித்த வேளையிலேயே பலர் காயமடைந்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சியால் மருந்துவமனை ஒன்றும் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. 
 
லெம்னொஸ் விமான நிலையத்தின் கூரைப்பகுதி உடைந்து விழுந்ததால் பிரித்தானியப் பிரஜை ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
 
மேற்படி பூமியதிர்ச்சி  இஸ்தான்புல் நகரிலும் பல்கேரிய தலைநகர் சோபியாவிலும் உணரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments