facebook

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி 25 மீனவர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை கடற்பரப்பில் 25 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, மீ்ன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய கூறினார்.
மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments