facebook

14,000 அடி உயரத்திலிருந்து குதித்த முதியவர்

கனடாவில் முதியவர் ஒருவர் பாராஷூட்டில் பறந்து சுமார் 14000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் ரால்ப் மெவில்லி (92) என்ற முன்னாள் இராணுவ வீரர் வசித்து வருகிறார்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று ஓய்வு பெற்ற இந்த முதியவருக்கு, பாராஷூட்டில் பயணிக்க வேண்டும் என மிகுந்த ஆசையுண்டு.
எனவே தன் நீண்டநாள் ஆசையை தனது பேத்தி , லூவென் வைட் என்பவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ரால்பிற்கு சிறிது காலம் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் அனுபவமிக்க வீரர் ஒருவருடன் ரால்ப், சுமார் 14,000 அடி உயரித்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த அனுபவம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தாத்தாவின் நீண்டநாள் ஆசையை பூர்த்தி செய்ததில், தனக்கு பெரும் மனநிம்மதி கிடைத்துள்ளதாக, அவருடைய பேத்தி லூவென் வைட் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments