facebook

13வது திருத்தம் குறித்து இலங்கையுடன் பேசியுள்ளோம்! சுஸ்மா சுவராஜ்


அயல்நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சில் தமது பணிகளை பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, கருத்து தெரிவித்த அவர், இலங்கைத் தமிழர் பிரச்சினை, குறித்தும், தமிழ் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.மீனவர்கள் விவகாரம் குறித்தும் எழுப்பினோம். 13வது திருத்தச்சட்டம் குறித்தும் பேசப்பட்டது. கச்சதீவு குறித்து நாம் குறிப்பிட்டு பேசவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments