facebook

13வயது மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற பாடசாலை உப அதிபர் கைது!

கிளிநொச்சியில் 13 வயது மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற 51 வயது பாடசாலை உபஅதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி நகரில் தனியார் வகுப்பு ஒன்றிற்குச் சென்றிருந்த மாணவி மீதே, அங்கு கல்வி கற்பிக்கும் உப அதிபர் பாலியல் வல்லுறவு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரம்பேவ, மஹகன, தராவ பகுதியைச் சேர்ந்த உப அதிபரே கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments