facebook

வடமத்திய மாகாணத்தில் 1000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்!

விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடநெறிகளுக்காக புதிதாக 1000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் வட மத்திய மாகாண கல்வி அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நாட்டில்  நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்க்கும் முகமாக எதிர்வரும் 31 ஆம் திகதியே இந்த 1000 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 2137 நியமனங்கள் வழங்கப்பட்டதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments